உள்நாடு

கடந்த 24 மணித்தியாலயத்தில் 510 பேர் தொற்றாளர்களாக பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு இதுவரையில் 13,929 பேர் உள்ளாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 510 பேர் புதிதாக இனங்காணப்பட்டிருந்தனர்.

அதன்படி,

– 213 கொழும்பு
– 183 கம்பஹா
– 72 வெலிக்கடை சிறைச்சாலை
– 12 குருநாகல்
– 09 காலி
– 06 களுத்துறை
– 04 கேகாலை
– 03 கண்டி
– 02 நுவரெலியா
– 05 (மட்டக்களப்பு, பதுளை,அம்பாறை,மொனராகலை, திருகோணமலை – [தலா ஒன்றாக])
– 01 பொலிஸ் அதிகாரி (கிருலப்பனை)

அதனடிப்படையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,451 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் 1,007 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 8,403 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 8,285பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,609 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இறக்குமதி

அநுராதபுர துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரிப்பு

கொழும்பினை தொடர்ந்து கம்பஹாவிலும் வலுக்கும் கொரோனா