உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 42,496 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் 42,496 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 9,577 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 16,534 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

13,775 பேருக்கு ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசியும், 2,610 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

ரஞ்சன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்