உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 22,501 பேருக்கு சைனோபாம் இரண்டாம் செலுத்துகை

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 22,501 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதுடன் 26,810 பேருக்கு முதலாம் செலுத்துகையும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரையில் 1,390,126 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 339,932 பேர் இரண்டாம் செலுத்துகையை பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் 2,426 பேருக்கு நேற்று ஸ்புட்னிக – வி தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதோடு இதுவரையில் 6,116 பேர் இரண்டாம் செலுத்துகையை பெற்றுள்ளனர்.

அத்துடன் 64,986 பேருக்கு இதுவரையில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி முதலாம் செலுத்துகை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று அரச விடுமுறை

முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

இலங்கை பெண்களுக்கு இலவசமாக ஜப்பானில் வேலை வாய்ப்பு