சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கொழும்பு ஜம்பட்டா வீதி பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேனர தெரிவித்துள்ளார்.

அப்துல் கபூர் ரிஸ்வான் என்ற நபரே 01 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைதாகியுள்ளார்.

2018ம் ஆண்டு இடம்பெற்ற 04 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாகவும், எனினும் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் எவரும் உயிரிழக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேனர மேலும். கூறியுள்ளார்.

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்…

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

50 ரூபாவினால் குறைக்க முடியும்