வகைப்படுத்தப்படாத

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – சவுதி அரேபியாவில் எரிபொருள் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதனால் சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது.

ஏமன் கிளர்ச்சிப்படையினரின் தாக்குதலால் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக இளவரசரும், அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரியுமான அப்துல் அஜீஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Related posts

Interim Order issued on garbage containers

மே தின கூட்டத்தில் சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது கட்டாயம்

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..