வகைப்படுத்தப்படாத

கச்சத்தீவை மீளப்பெறுவதே பிரச்சினைக்கு தீர்வு – தமிழக முதல்வர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவை மீளப்பெறுவதன் மூலமே இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஊடாக தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு பழனிச்சாமி, இந்திய பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

ඇවන්ගාඩ් සිද්ධියට අදාළ තිදෙනෙක් යළි රක්ෂිත බන්ධනාගාරයට

Ranjan Ramanayaka to meet the Prime Minister today