சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(28) வெளியாகின.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு.

முதலாம் இடத்தை கொழும்பு விசாகா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிலன்க திசிவாரி வருசவிதான பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் இடத்தை கொழும்பு விசாக மகளீர் கல்லூரியை சேர்ந்த கரசின்க ஆராச்சிகே சவிதி ஹன்சதியும், கம்பஹா ரத்னவலி மகளீர் கல்லூரியின் சஞ்சனி திலேகா குமாரியும், மாத்தறை சுஜாதா ராஹூல வித்தியாலத்தின் களுஆராச்சிகே கன்கனம்கே மினிதி ரெபேகா ஆகிய மூன்று பேர் பெற்றுக் கொண்டனர்.

71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், இதில் 9 ஆயிரத்து 413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்றுள்ளனர்.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk இணையத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு…

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது