சூடான செய்திகள் 1

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான பணிகள் ஒவ்வொரு வருடமும் டிசம்பரில்

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஒவ்வொரு வருடமும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் பூரத்தி செய்ய கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இதற்கமைவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும்.

பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பரீட்சை பணிகளில் ஈடுப்படுத்தப்படும் சுமார் 30ஆயிரம் ஆசிரியர்களை பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுப்படுத்த கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தீர்மானித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்

“தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே முன்னெடுத்தனர்” கார்டினலுக்கு விஷேட அறிக்கை வழங்கிய கோட்டபாய

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வரும் பரிதாபநிலையில்