வகைப்படுத்தப்படாத

ஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது

(UTV|OMEN)-அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

CID permitted to question IGP over lift incident

‘Sectors affected by 04/21 to be normalised by August’

இங்கிலாந்தில் தீவிரவாதத் தாக்குதல் – பலர் பலி – [VIDEO]