உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் விபத்து – தாயும், மகனும் காயம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (05) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர்.

பஸ் வண்டியில் பயணித்த இருவரும் பஸ் வண்டியில் இருந்து இறங்கி வீதியைக் கடக்கும் போது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு

editor

கொரோனா பலி எண்ணிக்கை 58

தமிழர்கள் உரிமையுள்ளவர்களாக வாழ 13ஆவது திருத்த சட்டமே அவசியம் – சந்திரசேகரன்.