உள்நாடு

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|பதுளை) திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மாணவர்களும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!

இன்று மின்வெட்டு தொடர்பிலான முழு விபரம்

ரணில் ஆடுகளத்தில் கூட இல்லை – வெற்றிக் கம்பத்தை அண்மிக்கிறார் சஜித் – அநுர தோற்பது நிச்சயம் – ரிஷாட் எம்.பி

editor