உள்நாடு

ஒளடத உற்பத்தி ,பரிசோதனை நிலையம் திறந்து வைப்பு

(UTV | கொழும்பு) – ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(02) கலந்து கொண்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்காக 13.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆண்டுதோறும் 1.8 பில்லியன் மருந்து மாத்திரைகள் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்த உற்பத்தி நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் உள்ளூர் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய உள்நாட்டு ஒளடத உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் இந்நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் வெளிநாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஒளடத உற்பத்தி இடம்பெறவுள்ளது.

Related posts

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு

‘சஜித் தரப்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

editor