கிசு கிசு

ஒலிம்பிக்கை தாக்கியது கொரோனா

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் பாதிப்பு மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இரத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் சீனா உள்பட 25 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது.இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் பீதியில் உள்ளது. இதனிடையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 24 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த போட்டிகள் இரத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இதன் காரணாமாக ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைக்கவோ இதுவரை எந்தவித திட்டமும் போடப்படவில்லை.

இந்நிலையில் வருகின்ற மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி இரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.கப்பல் பயணிகள் மூலம் ஜப்பானிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

பலதார திருமணத்திற்கு முற்றுப்புள்ளி

மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கு விரும்பிய உனக்கு நான் லிமினி வாழ்த்துகிறேன்

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்