கேளிக்கை

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!

(UTV|INDIA) கார்த்தி நடித்த ‘தேவ்’ திரைப்படம் வரும் 14ஆம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் கார்த்திக்கு இந்த படம் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘தேவ்’ ரிலீஸ் ஆகும் அதே 14ஆம் திகதி சூர்யாவின் ‘என்.ஜி.கே. திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இந்த டீசரை வரவேற்க சூர்யா ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில் வரும் 14ஆம் திகதி ‘தேவ்’ ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் ‘என்.ஜி.கே. படத்தின் டீசரையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு இந்த தகவல் இரட்டை விருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

 

 

 

Related posts

வில்லனாகும் சிம்பு…

பூஜாகுமாருடன் சிங்கப்பூரில் கமல்ஹாசன்?

ஒவ்வொரு ஃபிரேமையும் நான் ரசித்து பார்த்தேன்- தினேஷ் கார்த்திக்