உள்நாடு

ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரையில் இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கையின் பிரகாரம், மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 19 கொவிட் மரணங்களும், ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

நேற்று (09) உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 மரணங்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.

வாழைச்சேனை, பரந்தன், கொழும்பு-15, வத்தளை, வெல்லம்பிட்டி, அவிசாவளை, நீர்கொழும்பு, கொழும்பு-14, கொட்டாஞ்சேனை, துலங்கடவல, வெலிசறை, பண்டாரகம, காலி, பூஜாபிட்டிய, கம்பளை, அம்பேபுஸ்ஸ, தெனியாய, பொகவந்தலாவை, பரகடுவ, தெடிகமுவ, வெல்லவாய, ஹெம்மாத்தகம, கனேமுல்ல, கோனவல, ஏக்கல, கரந்தெனிய, மொரட்டுவை, வாத்துவ ஆகிய இடங்களில் இந்த கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஏறாவூர், நுவரெலியா, பசறை, அம்பாறை, மடபாத்த, அலுபொமுல்ல, பிலியந்தல, மாத்தளை, வத்தேகம, பலாங்கொடை, களனி, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, புஸ்ஸல்லாவை, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்டை, கண்டி, கொழும்பு-07, கலகெதர, களுத்துறை, கொழும்பு-10, மாத்தறை, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் கின்தோட்டை ஆகிய இடங்களிலும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

6 பேர் வீட்டிலும், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதும், 56 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) 29 வயதுக்கு கீழ் 3 பேரின் மரணங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்க இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்.