உள்நாடு

ஒரே நாளில் 5,000 க்கும் மேற்பட்ட PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி நேற்று(07) 5,608 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் புதிதாக மேலும் 202 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, திவுலுபிட்டிய கொத்தணியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,034 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.​

அதனடிப்படையில் இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4459 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது