சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் இன்று (12) புதன்கிழமை விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 வயது தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, குறித்த பகுதி இளைஞர்களினால் நாய் தாக்கப்பட்டு இறந்துள்ளது. நாயின் தலைப் பகுதியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஏ. சி. எம். பஸால், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் நாளை அப் பிரதேசத்திலுள்ள கட்டாக் காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்