விளையாட்டு

ஒருநாள் அணியின் புதிய தலைவராக திஸர பெரேரா

(UTV| COLOMBO)-ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் இலங்கை அணித் தலைவராக திஸர பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோபூர்வ அறிவிப்பை இன்று மாலை சிறிலங்கா கிரிக்கட் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் அணித்தலைவராக இதுவரை உப்புல் தரங்க செயற்பட்டிருந்தார்.

இதேவேளை, அணித்தலைமைக்கு முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், லஹிரு திரிமன்னவுடன், நிரோஸன் திக்வெல்லவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் சுற்று போட்டியின் போது இருபதுக்கு 20 தொடரில் திஸர பெரேரா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.

கடந்த 11 மாதங்களாக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, அதில் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

மேலும் 12 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளது.

எனவே இந்த தோல்விகளை தடுக்கவும், 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரை இலக்காக கொண்டும் அணிக்கு புதிய தலைவரை நியமிக்க சிறிலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை

மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றது

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்