சூடான செய்திகள் 1

ஒரு வார கால பகுதிக்குள் தேங்கியுள்ள சகல கொள்கலன்களும் வெளியேற்றப்படும்

(UTV|COLOMBO) துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வார காலப்பகுதியினுள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க பணிப்பாளர் மகேந்திரன் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஒரு நுழைவாயில் வழியாகவே கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு எதிராக மாற்று நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுங்கப் பணியாளர்களின் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிக்கும் பணிகள் முடங்கியிருந்தமை குறிப்பித்தக்கது.

 

 

 

 

Related posts

சட்டவிரோத மின்சார பாவனை தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபா வருமானம்

மேலும் இருவர் குணமடைந்தனர்

பாடசாலை மாணவி செய்த காரியம்…!பதுளையில் சம்பவம்…!