உள்நாடு

ஒரு நாளில் நாடே ஸ்தம்பிதம்

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச, அரச அனுசரணை பெற்ற மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பல அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்குமாறு கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

கல்வி, போக்குவரத்து, பெருந்தோட்ட தொழிலாளர்கள், துறைமுகம், மின்சாரம், வங்கி, தபால், சமுர்த்தி, அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் முதலீட்டு வலய சேவையாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலை கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தன.

அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகளும் பாதிப்படைந்தன. அதன் பணியாளர்கள் சேவைக்கு செல்லாமை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் முன்னறிவிப்பின்றி சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் பல பகுதிகளில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.

Related posts

மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் சில இரத்து

தலைமறைவாகியுள்ள 24 பேருக்கு இன்டர்போல் எச்சரிக்கை

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்