அரசியல்உள்நாடு

ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் – விஜயதாச

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தீர்மானம் மிக்க வலுவான கட்சியாக செயற்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – இதுவரை 07 சடலங்கள் மீட்பு

editor

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்