உள்நாடு

ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதானவரிடம் விசாரணை

ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை (25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கல்முனைக்குடி 02 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 790 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

நிதியமைச்சர் ரணிலை பதவி விலகுமாறு அமைச்சர் தம்மிக்க பெரேரா கோரிக்கை

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!