உள்நாடு

ஐரோப்பிய நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும், கடிதம் தவிர்ந்த ஏனைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிக்கொள்கை திருத்தமானது, பெறுமதிசேர் வரி மற்றும் ஏனைய தீர்வை வரிக்கொள்கைகளுக்கு உட்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 150 யூரோவுக்கு குறைந்த பெறுமதியுடைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கும், அனுப்புனர் நேரடியாக குறித்த வரியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணமுடிவு நாட்டிற்கு செலுத்த வேண்டும் என்றும் அஞ்சல்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

எரிவாயு விலையில் மாற்றம் இல்லையாம்.

தொடரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை