சூடான செய்திகள் 1

ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.

குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதுடன், இன்று முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு முன்னதாக இவர்கள் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இவர்களுள் குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள 30 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி

இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு