சூடான செய்திகள் 1

ஐந்தாவது தவணை கடன் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை இன்று கையளிப்பு

(UTV|COLOMBO) ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிக்கப்படவிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த கடன் தவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நேற்று முன்தின மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பிலான முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்தது. அதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிதியம் உறுதியளித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை