விளையாட்டு

ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

(UTV | கொழும்பு) – ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

 

Related posts

110 ஓட்டங்களுக்குள சுருண்டது பங்களாதேஷ் அணி

நாணய சுழற்சியில் நியூஸிலாந்து அணி வெற்றி

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு