விளையாட்டு

ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவாகிய இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார்.

இந்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இருவரையும் வெற்றிகொண்டு கமிந்து மெண்டிஸ் ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான அதி சிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

கமிந்து மெண்டிஸ், 2024ஆம் ஆண்டில் இந்த விருதை பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை வெடிப்புச் சம்பவங்களுக்கு விராத் கோலி கவலை

ஒத்திவைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள்

ஒலிம்பிக் 2021 இரத்தாக அதிக வாய்ப்பு