உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

( UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தனாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்

நாட்டில் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!