அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்றில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்டதலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளிற்கு அழைப்பு விடுப்பதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை

மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

“சுதந்திர தினத்தன்று ரஞ்சன் விடுதலையாவார்” – சஜித் [VIDEO]