வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கம்

(UTV| COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்  இதனை தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்பட்ட பின்னடைவினால் அரசாங்கத்தில் ஸ்திரமற்ற நிலைய உருவாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய உறுப்பினருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தாம் செயற்பட வேண்டியிருப்பதால் பிரதமரே உரிய தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறித்த சிரேஸ்ட அமைச்சர் எமக்குத் தெரிவித்தார்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியிலும் சில முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்திப்பு அலரிமாளிகைளில் இடம்பெறுகின்றது.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் மற்றும் அதன் பின்னரான தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல் இன்று பிற்பகல் 3 மணி மற்றும் 5 மணிக்கும் மேலும் இரண்டு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு…

தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை

பெண்களை கற்பழித்த பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை…