சூடான செய்திகள் 1

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மாலை கூடவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

அந்தக் குழுவுக்கு 12 உறுப்பினர்கள் இரகசிய வாக்கடெுப்பு மூலம் கடந்த 08ம் திகதி தெரிவுசெய்யப்பபட்டு நியமிக்கப்பட்டதுடன், அந்தக் குழு முதல் தடவையாக இன்று மாலை கூடவுள்ளது.

அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

அந்தக் குழுவில் அகிலவிராஜ் காரியவசம் உட்பட மங்கள சமரவீர, கயந்த கருணதிலக்க, நவீன் திஸாநாயக்க, ரஞ்சித் மததும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, இரான் விக்கிரமரத்ன, அஜித் பி பெரேரா, ஜே.சி. அளவத்துவல, நலீன் பண்டார மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உறுப்பினர் சபை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

நான் எதற்கும் பயந்தவன் அல்ல

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு