சூடான செய்திகள் 1

ஐ.தே.க உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தீர்மானம் விரைவில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “99 வீதமான கட்சி உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இந்நாட்டைப் பொருத்தவரை தற்போதுள்ள நிலையில், மிகவும் வெற்றிகரமான அமைச்சராகவும் சஜித் பிரேமதாஸதான் இருக்கிறார். எனவே, அவரைக் களமிறக்குவதே சிறப்பானதாக இருக்கும்

Related posts

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம்