உள்நாடுசூடான செய்திகள் 1

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

ஏமாந்துவிடாதீர்கள்! பாடுபட்டு உழைத்த உங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்! – இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு! பிரமிட் திட்டங்கள் இலங்கையில் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி 8 பிரமிட் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.பிரமிட் திட்டங்களை அவதானமாக இருங்கள் இவை பிரமிட் திட்டங்களாக இருக்கலாம் பிரமிட் திட்டங்கள் சட்டவிரோதமானவை உங்களுக்கு தெரியுமா? இலங்கை மத்திய வங்கி 8 பிரமிட் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாய் நீங்கள் அறிவீர்களா? எவ்வாராயினும் இவ்வட்டவணை முடிவானதல்ல – இலங்கை மத்திய வங்கியின் புலனாய்வுகளின் கீழ் இன்னமும் காணப்படுகின்ற வேறு மோசடிக்காரர்ர்களால் தொழிட்படுத்தப்படுகின்றபிரமிட் திட்டங்கள் இயங்கலாம் .இவற்றில் சில பிரபல்யமான விளையாட்டு , மத மட்டும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குபவர்களாகவும் தம்மை சித்தரிக்ககூ யவர்களாக இருக்கலாம் .ஏமாந்து விட வேண்டாம் , பாடுபட்டு உழைத்த உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.என இலங்கை மத்திய வாங்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

இடியுடன் கூடிய மழை