சூடான செய்திகள் 1

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜகத் டி சில்வாவின் தலைமையிலான ஐந்து பேர் அங்கம் வகிக்கின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Related posts

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ​

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்