கேளிக்கை

ஏ.ஆர். ரகுமான் இசையில் அனுஷ்காவின் நடிப்பு…

(UTV|INDIA) தெய்வங்களை முன்வைத்து நிறைய படங்கள் முந்தைய காலத்தில் உருவாகி இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் சீரியல்களில் தான் தெய்வங்களின் கதைகளை பார்க்க முடிகிறது.

இப்போது ஒரு ஸ்பெஷல் தகவல், அதாவது ஐயப்ப சுவாமியை பற்றி ஒரு படம் தயாராக இருக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம், ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.

ஸ்ரீகோகுலம் கோபாலன் என்பவர் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் தயாராக உள்ளது.

பல பிரபலங்கள் நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறவுள்ளது.

 

 

 

Related posts

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?

அக்ஷய் குமாருக்கும் கொரோனா

ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை