வகைப்படுத்தப்படாத

எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை

(UTV|NEPAL) நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார்.

மற்ற 2 வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரிதா ஷெர்பா புதிய சாதனையை படைத்தார். இந்த நிலையில் 23-வது முறையாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.

 

 

 

 

 

Related posts

දියර කිරි ලීටරයක මිල ඉහළ දැමීමට කටයුතු

பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் வீரர்கள் பத்திரமாக மீட்பு

வைரலாக பரவும் எலி பர்க்கர்-(VIDEO)