சூடான செய்திகள் 1

எல்ல காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் அழிவு

(UTVNEWS|COLOMBO) – பண்டாரவளை எல்ல மலைப்பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ பரவி வருகிறது.

இக்காட்டுத்தீயினால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் அழிவடைந்து நாசமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார்,இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

தீவிபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை மொனராகலை மரகல வனப்பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது

பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு