உள்நாடு

எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

“எல்ல ஒடிஸி நானு ஓயா” என்ற புதிய ரயில் இன்று (10) நானு ஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையத்திற்காக பயணத்தை ஆரம்பிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வார நாட்களில் காலை 08.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், பிற்பகல் 01.00 மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவிற்கும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Related posts

சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும் – ரிஷாட் எம்.பி

editor

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

மைக் பொம்பியோ இலங்கைக்கு