உள்நாடு

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு மீதான பரிசீலனை இன்று

(UTV | கொழும்பு) – பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்த எரிவாயு நிறுவனங்கள் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக குற்றவியல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுக்கள் இன்று (09) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்கினால் இந்த எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (08) தாக்கல் செய்யப்பட்டது.

எரிவாயு வெடித்தமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈட்டை செலுத்த, லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் குறித்த எழுத்தாணை மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

குஷி நகரில் முதலாவதாக தரையிறக்கிய இலங்கை விமானம்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு