உள்நாடு

எரிவாயு அடுத்த மாதமே விநியோகிக்கப்படும்

(UTV | கொழும்பு) – அடுத்த மாதம் (ஜூலை) 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அப்போது 7,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் பாரிய கப்பல் ஜூலை 10ஆம் திகதிக்கு பின்னர் மாலைதீவு கடற்பரப்பை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து சிறிய கப்பல்கள் தொடர்ந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, இம்மாதம் 5ஆம் திகதிக்குப் பின்னர் தினமும் 12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே அதுவரை சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இடைக்காலத் தடை உத்தரவு

editor

சவாலை ஏற்கத் தயார் என தலதா அத்துகோரள அறிவிப்பு

editor