சூடான செய்திகள் 1

எரிபொருள் விலையில் மாற்றம்- நிதி அமைச்சு

(UTV|COLOMBO) எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்று விடுமுறை தினம் என்பதால், அதுகுறித்து இன்று தீர்மானிக்கப்படும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

உண்மைக்கு புறம்பான செய்திக்கு 5 வருட சிறைத்தண்டனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை