உள்நாடு

எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைக்க முயற்சி – சி.ஐ.டியில் முறைப்பாடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் சலுகை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சாதாரண பொது வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்றய தின தங்கத்தின் விலை

சினோபாம் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் செலுத்த தீர்மானம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில்