நாட்டில் எந்வொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நாட்டில் எரிபொருள் தீர்ந்து போவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
வதந்திகளுக்குப் பயந்து மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்றால்தான் இந்தப் பிரச்சினை எழும்” என்றார்.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்காக பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% கொடுப்பனவு நேற்று முதல் இரத்துச் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.