அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்காது. எம்.பி.க்கள் தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

5 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், வாகனத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.”

“ஆடம்பரமற்ற வாகனத்தை வழங்குவதற்காக தற்போது வாகன இருப்பை தயாரிக்க நேரமில்லை.”

“இருப்பினும், நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. “எங்கள் முன்னுரிமை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் அல்ல.” என்றார்.

செய்திளாளர்- “தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்… அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வாகனங்களை வழங்குகிறதா? இல்லையா?”

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ –
“அரசாங்கம் எம்.பி.க்களுக்கு வாகனங்களை வழங்குவதில்லை.”

இதற்கிடையில், இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“5 ஆண்டுகளுக்குப் பிறகுதான், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சில அனுமதிகளை வழங்க எங்கள் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இப்போது நாம் பொருளாதாரத்தை சீர்திருத்திக் கொண்டிருக்கிறோம். அதனுடன் “ஒப்பிடுகையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாங்கள் ஓரளவு ஒப்புதல் அளித்துள்ளோம்.”

“எங்கள் வெளிநாட்டு இருப்புக்களில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எச்சரிக்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்கிறோம்.”

“தொடக்கத்திலேயே முழுமையாக திறக்க முடியவில்லை.”

“அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடைபெற்று வருகிறது.” என்றார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor

சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம், வாகனங்கள் தேவையில்லை – திலித் ஜயவீர

editor