விளையாட்டு

என்னுடைய சிறிய பங்களிப்பு கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது – ரகானே

(UTV|இந்தியா ) –  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை தலைவரான ரகானே இந்தியா பிரதமர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி, தன்னுடைய சிறிய பங்களிப்பு எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர நிவாரணம் வழங்கி உதவி செய்யலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ 51 கோடி ரூபாய் அளித்துள்ளது சுரேஷ் ரெய்னா 52 லட்சம் ரூபாய் தலைவரான ரகானே 10 லட்சம் வழங்குகிறார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘என்னுடைய சிறிய பங்களிப்பு. கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆதரவை கொடுப்பேன். வீ்ட்டில் தங்கியிருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் லசித் மாலிங்க…

கிரிக்கெட் போட்டியில் செல்பி எடுத்துக் கொள்வதற்கு தடை

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு