உள்நாடு

எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை

(UTV | கொழும்பு) – நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடமைக்கு சமூகமளிக்குமாறு முப்படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அவர்கள் வருகைத் தந்த பின்னர் உரிய சமூக இடைவெளியை பேணுவதற்கு முகாம்களில் இடவசதி போதவில்லை என்றால் அருகில் உள்ள பாடசாலைகளில் தங்குவதற்கு அனுமதியளிக்குமாறு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முடியுமானவரை முப்படையினரை முகாம்களுக்குள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும் அவ்வாறு முடியாது போனால் மாத்திரமே மாற்று வழியை தெரிவு செய்ய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

போதைபொருட்களுடன் நால்வர் கைது

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு!

துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசியமாகின்றது [VIDEO]