உள்நாடு

எத்தியோப்பியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எத்தியோப்பியாவில் சிக்கியிருந்த 230 இலங்கையர்கள் இன்று(06) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1710 இலக்க விமானத்தில் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் எத்தியோப்பியா சென்றிருந்த நபர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறு அழைத்தவரப்பட்ட அனைத்து இலங்கையர்களும் பி.சி. ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

‘பண்டிகைக் காலத்தில் 1 கிலோ அரிசி ரூ.300 ஆக உயரலாம்’

இன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி

துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணைக்கு