உள்நாடு

எத்தனோல் போத்தல்களுடன் மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- எத்தனோல் போத்தல்கள் மற்றும் மதுபான போத்தல்களுடன் கலால்வரி திணைக்கள அதிகாரி​ ஒருவர் ஜாஎல, பமுனுகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான அதிகாரி தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதி ஆணையாளர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி கலால்வரி திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரை சந்தித்த முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம்.

editor

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு