உள்நாடுசூடான செய்திகள் 1

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் இரு வாரங்களுக்கு இலங்கையில் ஊரடங்குட் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று(26) கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் ஏதேனும் ஓர் வழியில், குறிப்பாக சதொச உள்ளிட்ட நிறுவனங்கள் ஊடாக பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கண்டறியப்பட்ட நோயாளி யாருடன் தொடர்பு பேணியுள்ளார் என்பது குறித்து ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், இலங்கை இத்தாலியாக மாறுவதனை விரும்பாத காரணத்தினால் எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பிரபாகரனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – சரத் பொன்சேகா.

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு