வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் 27ம் திகதி வரை மழை அதிகரிக்கும்

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைக்காலநிலை இன்றிலிருந்து அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றிலிருந்து எதிர்வரும் 27ம் திகதி வரை குறிப்பாக கேகாலை , இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ , மத்திய , மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில பிரதேசங்களில் குறிப்பாக கொழும்பு , இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை , ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்கிளின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை

Seven injured after lorry loses brakes and crashes into multiple vehicles

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு